புதிய லுக்கில் தல தோனி - ஹேர் ஸ்டைலிஸ்ட் வெளியிட்ட பதிவு
பிரபல ஹேர் ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிம் புதிய ஹேர் ஸ்டைலில் தோனி இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது அப்படம் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்டாக விளங்குபவர் ஆலிம் ஹக்கிம். இந்தியாவின் திரைப்பிரபலங்களும், கிரிகெட் வீரர்கள் பலரும் இவரிடம் ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு தனது லுக்கையே மாற்றியிருக்கின்றனர். இதனால் ஆலிம் ஹக்கிமும் நன்க்கு பிரபலமானவர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 9.4 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். ஜவான் படம் முடித்த பிறகு தமிழ் இயக்குநர் அட்லீ கூட இவரிடம் தனது ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு முற்றிலும் வேறு தோற்றத்தில் காட்சி தந்தார்.
இந்நிலையில் ஆலிம் ஹக்கிம் புதிய ஹேர் ஸ்டைலில் தோனி இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்புகைப்படத்தில் தோனி கூலர் அனிந்து மிகவும் இளமையாகக் காட்சி தருகிறார். நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு அளித்த தோனி ப்ளேயராக மட்டும் கலந்து கொண்ட நிலையில், கழுத்தைத் தாண்டி விழுமளவுக்கு முடியை வளர்த்த படி வந்திருந்தார். கடந்த சீசன் தான் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் அதனால் தான் தோனி கிரிகெட்டில் அறிமுகமான போது எப்படி முடி வைத்திருந்தாரோ அதன்படியே மீண்டும் முடி வளர்த்தியிருக்கிறார் என்று பேசப்பட்டது.
எல்லோரது கணிப்பையும் பொய்யாக்கும்படி தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் ஆடவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் ஸ்டைலிஷான தோனியின் புதிய லுக்கிலான புகைப்படம் தற்போது வெளியாகியிருப்பதைக் கண்டு தோனி ரசிகர்கள் இதயங்களைப் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றர். அநேகமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்த லுக்கில்தான் தல தரிசனம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கிம் ‘ஒரே ஒரு தல தோனி’ என்று அப்பதில் குறிப்பிட்டிருக்கிறார்.
What's Your Reaction?