மாணவிகளே அச்சம் வேண்டாம்.. பஸ்சில் இனி யாரும் நெருங்க முடியாது.. பள்ளி கல்வித்துறை அதிரடி

பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. 

Apr 4, 2024 - 10:43
மாணவிகளே அச்சம் வேண்டாம்.. பஸ்சில் இனி யாரும் நெருங்க முடியாது.. பள்ளி கல்வித்துறை அதிரடி

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களை அவர்களது வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டிற்கும் அழைத்து செல்ல பள்ளி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன. அவ்வாறு பயன்படுத்தும் வாகனங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பாணைகள், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் சிறப்பு விதிகள், அரசாணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன. 

இருப்பினும் அண்மை காலமாக பள்ளி வாகனங்களில் நடத்துனர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வருவதாக செய்திகள் வெளியாகி வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பத்தாண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும்.  பள்ளி வாகனங்களில் நியமனம் செய்யப்படும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும். POCSO சட்ட விதிகள் பற்றி ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும். 

வாகன ஓட்டுனர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு தினசரி அவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பதை பரிசோதிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பள்ளி வாகனங்கள் குறித்த விவரங்கள் ஓட்டுனர், உதவியாளர் விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow