சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய ஜப்பான்.. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Apr 4, 2024 - 10:21
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய ஜப்பான்.. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

உலகில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் இரு தினங்களுக்க முன்பு இரண்டு இடங்களில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானில் வடக்கு பகுதியில் இவாட் மற்றும் அமோரி மாகாணத்தில் நள்ளிரவு 12.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. 
இந்த நிலநடுக்கங்களால் வீடுகள்லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஜப்பான் நாட்டில் ஹோன்ஷூ கிழக்குக் கடற்கரைக்கு அருகே வியாழக்கிழமை (04-04-2024) அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 முறை நில அதிர்வு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

பசிபிக் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் ஜப்பான் அமைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படுவது வழக்கம். இங்கு செசிமிக் செயல்பாடு அதிகம் இருப்பதால் எளிதாக நிலநடுக்கம் ஏற்படும். இதன் காரணமாக அடிக்கடி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இது வடக்கு ஜப்பான் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 2011 மார்ச் 11ம் தேதி அங்கு இந்த பேரழிவு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அதை தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டது. பலத்த சேதமும் ஏற்பட்டது. அணு உலைகள் மூடப்பட்டன.  

13 வருடங்கள் கழித்து மீண்டும் அதே புகுஷிமா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமி பாதிப்பும் ஏற்பட்டது.  கடல் நீர் நகருக்குள் புகுந்தது.

நேற்றைய தினம்  தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரத்தின் பல பகுதிகள் உருக்குலைந்து போனது. தைவான் தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹுவாலியன் கவுண்டியின் கடற்கரைக்கு சற்று தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தைவான் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மியாகோஜிமா தீவு உட்பட அப்பகுதியில் உள்ள தொலைதூர ஜப்பானிய தீவுகளில்  மூன்று மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும் என்று என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரயில், விமான சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தைவானில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 2,400 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow