தமிழகத்தில் அடுத்த போராட்டம்...14,000 வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்பு?

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு முதலமைச்சருக்கு இபிஎஸ் கோரிக்கை

Feb 27, 2024 - 10:02
தமிழகத்தில் அடுத்த போராட்டம்...14,000 வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்பு?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(27.02.2024) முதல் காலவரையற்ற போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் தமிழகத்தின் பொது நிர்வாகம் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், "தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையில் பணிப் பாதுகாப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14000 ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில், பொது நிர்வாகத்தில், குறிப்பாக தேர்தல் சமயத்தில் வருவாய்த்துறையின் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைப் போலன்றி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow