"என் மீது அவதூறு பரப்புவதால் எந்த பலனும் இல்லை..." அமீர் கூறும் விளக்கம் என்ன?

போதைப்பொருள் கடத்தலில் வசமாக சிக்கியிருக்கும் ஜாஃபர் சாதிக்குடன் தம்மை தொடர்படுத்தி பேசுவதால் எந்த பலனும் இல்லை என இயக்குநரும், நடிகருமான அமீர் மீண்டும் விளக்கம் அளித்திருக்கிறார்.

Mar 1, 2024 - 10:26
"என் மீது அவதூறு பரப்புவதால் எந்த பலனும் இல்லை..." அமீர் கூறும் விளக்கம் என்ன?

இயக்குநர் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கிறார். அவருடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியான நிலையில், உடனடியாக விளக்க அறிக்கையை அமீர் வெளியிட்டார்.

அதில், சட்டவிரோத செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் தாம் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மது, மாது. சூது ஆகிய சித்தாந்தங்களுக்கு எதிரான தம்மை, இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்திப் பேசுவது ஏற்கக் கூடியது அல்ல என கூறியிருக்கிறார். 

தமக்கும், தமது குடும்பத்துக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்து, அவதூறு பரப்புவதால் எந்தப் பலனும் இல்லை எனவும், விசாரணைக்காக யார் எப்போது அழைத்தாலும், தாம் விளக்க அளிக்க தயார் எனவும் அமீர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow