சடலமாக கிடந்த தாய்... வீடு திரும்பிய பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Mar 1, 2024 - 09:29
சடலமாக கிடந்த தாய்... வீடு திரும்பிய பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

ஒட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது கணவர் ஜெயபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, தமது 3 பிள்ளைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். அவரது பிள்ளைகள் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள், தாய் காளியம்மாளை தேடி இருக்கின்றனர். அப்போது, வீட்டின் கதவு அருகே தாய் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த புதியம்புத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி ராஜா சுந்தரும் விசாரணை மேற்கொண்ட நிலையில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow