“அப்பாவுக்கு எங்க காம்போ பிடிச்சிருக்கு... லோகேஷை செலக்ட் பண்ண இதுதான் காரணம்” ஸ்ருதிஹாசன் ஓபன்
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள இனிமேல் ஆல்பம் நேற்று வெளியானது.
கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இனிமேல் ஆல்பம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் லோகேஷ். ஸ்ருதி, கமல் இருவரும் கேட்டுக் கொண்டதால் நோ சொல்ல வாய்ப்பே இல்லாமல் இந்தப் பாடலில் நடித்ததாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதேபோல், லோகேஷை இதில் நடிக்க வைத்தது ஏன் என்பது பற்றியும் ஸ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார். பல படங்களில் ஹீரோயினாக நடித்தும் கோலிவுட்டில் இதுவரை பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை.
இதனால் தனது ஃபேவரைட்டான ஆல்பம் சாங் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க முயற்சி செய்து வருகிறார். அதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜையும் இக்கூட்டணியில் கொண்டு வந்ததால் இனிமேல் ஆல்பம் மீது அதிக எதிர்பார்ப்பு வந்தது. இப்பாடல் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், “இனிமேல் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். அப்போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன்.”
“ஒரு கட்டத்தில் ‘இனிமேல்’ என்ற வார்த்தையைப் பின்தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என எண்ணம் மேலெழுந்தது. அதன் பின்னர் என் அப்பா கமல்ஹாசனும் இதற்குள் வந்தார். அவரே ‘இனிமேல்’ பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். நான் சிறுவயதில் இருந்தே திரையிசைப் பாடல்களுடன் சேர்ந்து பயணித்து வருகிறேன். இதனிடையே Independent பாடல்கள் மீதான காதல் ஏற்பட்டது. இனிமேல் ஆல்பத்திற்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைக்க காரணம் என் அப்பா கமலும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனமும் தான்.”
”விக்ரம் படப்பிடிப்புத் தளத்தில் ஒருமுறை லோகேஷ் கனகராஜ்ஜை கேமராவில் பார்க்கும் போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதன்பின்னர் தான் லோகேஷை இதில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். இனிமேல் ஆல்பம் நான்கு நிமிடத்திற்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான சிறு முயற்சி தான். ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நிறை குறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை இதன் மூலம் சீர்தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கை தான்.”
“எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் மிக நேர்மையாக கருத்து சொல்லுவார். அவருக்கு எங்கள் இணை பிடித்திருந்தது என்றே கூறினார். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் இயக்குநர் இதில் நடித்திருப்பது என் அதிர்ஷ்டம் தான். நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காதல் என்பது ஒரு டெலூஷன் என்பார்கள். அது நிறைவடையவில்லை என்றால் அது ஒரு மாயாவாகவே எஞ்சிவிடும். ஆனால் அது நிறைவடைந்துவிட்டால் அது Dreams Comes true மொமண்ட். இது Delution-ல் இருந்து Solution நோக்கி காதல் நகரும் இடம் என்று கூறுவேன்” என்றார்.
What's Your Reaction?