This Week OTT Release: லவ்வர் முதல் ஜோஷ்வா வரை… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் மூவிஸ், வெப் சீரிஸ் லிஸ்ட்!

இந்த வாரம் மார்ச் 29ம் தேதி லவ்வர், ஜோஷ்வா உள்ளிட்ட பல படங்கள், வெப் சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதுபற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Mar 28, 2024 - 17:43
This Week OTT Release: லவ்வர் முதல் ஜோஷ்வா வரை… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் மூவிஸ், வெப் சீரிஸ் லிஸ்ட்!

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு லவ்வர் திரைப்படம் ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. மணிகண்டன் நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான லவ்வர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் லவ்வர், இந்த வாரம் முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதனைத் தொடர்ந்து தமிழில் ஜோஷ்வா திரைப்படமும் இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படத்தில் வருண், ராஹேய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ்வா படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. இதனால் மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான ஜோஷ்வா, இந்த வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.  

ஷபீர் கல்லாரக்கல், மிர்னா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸான பர்த்மார்க் திரைப்படம் இந்த வாரம் முதல் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தெலுங்கில் சுந்தரம் மாஸ்டர் திரைப்படம் ஆஹா தளத்திலும், ரேப்பிட் ஆக்‌ஷன் மிஷன் அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் ரிலீஸாகின்றன. இந்தியில் வோ பி தின் தி Zee5 தளத்திலும், பாட்னா சுக்லா ஹாட்ஸ்டாரிலும் வெளியாகின்றன. கன்னடத்தில் இந்த வாரம் இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 

அதேபோல், Next Goal Wins ஹாட்ஸ்டார் தளத்திலும், The Settlers என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸ் Mubi ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. நெட்பிளிக்ஸ் ரசிகர்களுக்கு The Beautiful Game, Heart Of The Hunter, No Pressure, Rest In Peace, The Believers, The Great Indian Kapil Show, The Wages Of Fear, Testament The Story Of Moses ஆகியவை வெளியாகின்றன. அதேபோல் அமேசானில் A Hipster In Rural Spain, Hope On The Street கொரியன் வெப் சீரிஸ் ரிலீஸாகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow