விருதுநகரில் முரசு கொட்டும் விஜயபிரபாகரன்.. சளைக்காத ராதிகா.. இனி அடி தூள்

விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் டெல்லி மோடி அணி சார்பில் மனு தாக்கல் செய்த வேதா தாமோதரன் உட்பட 27 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு.

Mar 28, 2024 - 17:06
விருதுநகரில் முரசு கொட்டும் விஜயபிரபாகரன்.. சளைக்காத ராதிகா.. இனி அடி தூள்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் டெல்லி மோடி அணி சார்பில் மனு தாக்கல் செய்த வேதா தாமோதரன் உட்பட 27 வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கி நேற்று 27ஆம் தேதி நிறைவடைந்தது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு 34 வேட்பாளர்கள் 41 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் பாஜக சார்பாக போட்டியிடும் ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயபிரபாகரன், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கௌஷிக் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

டெல்லி பாஜக மோடி அணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த வேதா தாமோதரன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேண்டும் என கேட்ட கரும்புச் சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அசோக் குமார் உட்பட 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கரும்புச் சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் மற்றும் அவருக்கு ஆதரவாக யாரும் வேட்புமனு பரிசீலணையில் கலந்துகொள்ளாத நிலையில், அவருடைய வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாஜக சார்பில் மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த நடிகர் சரத்குமார் மனு  உட்பட 14 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow