This Week OTT Release: தி ஃபேமிலி ஸ்டார் முதல் தில்லு ஸ்கொயர் வரை… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்

ஏப்ரல் இறுதி வாரமான 26ம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Apr 25, 2024 - 18:13
This Week OTT Release: தி ஃபேமிலி ஸ்டார் முதல் தில்லு ஸ்கொயர் வரை… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்

சென்னை: தமிழில் இந்த வாரம் இரண்டு படங்கள் மட்டுமே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. எம்.எஸ் பாஸ்கர், திரவ், இஸ்மத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப்பம் குளிர் மழை படம், ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது. பாஸ்கல் வேதமுத்து இயக்கிய இந்தப் படத்துக்கு தியேட்டரில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதேபோல், ஜெய் ஆதித்யா, ஜெகன் ஆகியோர் நடித்துள்ள இடி மின்னல் காதல் திரைப்படமும் ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸாகிறது.  

தெலுங்கில் இந்த வாரம் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. விஜய் தேவரகொண்டா, மிருணால் தாகூர் நடிப்பில் பரசுராம் இயக்கிய திரைப்படம் தி ஃபேமிலி ஸ்டார். ஏப்ரல் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான இந்தப் படம் கலவையான விமர்சனங்களுடன் 50 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில் தி ஃபேமிலி ஸ்டார் ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி இந்தப் படம் நாளை முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.  

அதேபோல், சித்து ஜொன்னலகத்தா, அனுபமா பரமேஸ்வரன் நடித்த தில்லு ஸ்கொயர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியான தில்லு ஸ்கொயர் 100 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்தது. முக்கியமாக அனுபமா பரமேஸ்வரனின் லிப் லாக் சீன் இப்போதும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் தில்லு ஸ்கொயர் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனுடன் பீமா என்ற தெலுங்குப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.  

கன்னடத்தில் யுவா என்ற திரைப்படம் இந்த வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸாகிறது. இந்தியில் கிராக் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும், யாரியான் 2 ஜியோ சினிமாவிலும் வெளியாகின்றன. தில் தோஸ்தி திலிமா என்ற இந்தி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. Kung Fu Panda 4 BMS ஓடிடி தளத்திலும், House of The Owl என்ற ஜப்பான் மொழி வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் ரிலீஸாகின்றன.  

நெட்பிளிக்ஸ் தளத்தில், Good Bye Earth என்ற கொரியன் சீரிஸ், City Hunter என்ற ஜாப்னீஷ் சீரிஸ், Dead Boy Detectives வெப் சீரிஸ், The Asunta Case என்ற ஸ்பானீஷ் சீரிஸ், Fight For Paradise என்ற ஜெர்மன் சீரிஸ் ஆகியவை இந்த வாரம் ரிலீஸாகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow