வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. இடி மின்னலோடு மழை வரப்போகுது.. குடையோடு வெளியே போங்க

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

May 6, 2024 - 17:20
வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. இடி மின்னலோடு மழை வரப்போகுது.. குடையோடு வெளியே போங்க

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் காலம் என்பதால் அனல் காற்று வீசி வருகிறது. பல ஊர்களில் வெப்ப அலையும் வீசத் தொடங்கியுள்ளது. வெப்பச்சலனத்தால் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பேரையூர் (மதுரை) தலா 5, ஆண்டிபட்டி (தேனி) 4, மாயனூர் (கரூர்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 3, சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), கடவூர் (கரூர்), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), தேக்கடி (தேனி) தலா 2, அம்மாபேட்டை (ஈரோடு), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), எருமைப்பட்டி (நாமக்கல்), பெரியாறு (தேனி), வத்திராயிருப்பு (விருதுநகர்), சண்முகாநதி (தேனி), நாமக்கல் (நாமக்கல்), பென்னாகரம் (தர்மபுரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கூடலூர் (தேனி) தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.  அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.8° செல்சியஸ் (+7.5° செல்சியஸ்) ஈரோட்டில் 43.4° செல்சியஸ் (+5.9° செல்சியஸ்)  மற்றும்  திருப்பத்தூரில்  42.2° (+5.0° செல்சியஸ்)  செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை வேலூரில்  42.1° செல்சியஸ், மதுரையில்  (விமான நிலையம்) 41.8° செல்சியஸ், திருச்சி (விமான நிலையம்) & திருத்தணியில் 41.7° செல்சியஸ், சேலம் &   பாளையம்கோட்டையில் 41.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
 
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° – 40° செல்சியஸ்     பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள்,   புதுவை    மற்றும் காரைக்கால்   பகுதிகளில் 36° – 38° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 24° –26°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.4° செல்சியஸ் (+1.8° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.0° செல்சியஸ் (+0.6° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்றைய தினம் தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

07.05.2024: தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

10.05.2024:  தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

11.05.2024 மற்றும் 12.05.2024:  தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

06.05.2024 &  07.05.2024: அடுத்த 2 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய   மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 08.05.2024 முதல் 10.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2°  செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும். 

06.05.2024 முதல் 10.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  06.05.2024 & 07.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை 3°-5°  செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.  

 06.05.2024 முதல் 10.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:  06.05.2024 முதல் 10.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 45-80% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும்  இருக்கக்கூடும். 

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:  நாளைய தினம் (07.05.2024)  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இன்றைய தினம் (06.05.2024) முதல் 08.05.2024 வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்,  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்றும் நாளையும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow