ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவரை செய்யப்பட்ட நீட் மாணவர்கள்… சிசிடிவியில் பகீர்!

நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட  அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Oct 18, 2024 - 16:31
ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவரை செய்யப்பட்ட நீட் மாணவர்கள்… சிசிடிவியில் பகீர்!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது

குறிப்பாக, தமிழகத்தில் எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக நடுத்தர வர்க்க முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உருவாகி உள்ளன. 

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல்(JAL NEET ACADEMY) என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி உள்ளார்.

இந்த பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரி இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாகவும் அதிக அளவு மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளன. சராசரியாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து மற்றொரு ஒரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் மாணவர்களை பிறம்பால்(கம்பால்) சரமாரியாக தாக்கு உள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு உடலில் கை கால் முதுகு பின்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

மேலும்,மாணவர்களை தாக்குதல் அவதூறாக பேசுதல், காலணி கொண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் இந்த சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல  விரும்பாத நபர் ஒருவர் மாணவர்களை தாக்குவது போன்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் இணைந்த ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை சி எஸ் ஆர் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர் பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow