பலத்த காற்றுடன் கொட்டப்போகும் கோடை மழை.. சூறாவளிக்காற்று.. மீனவர்களும் கவனம்!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Apr 12, 2024 - 14:46
பலத்த காற்றுடன் கொட்டப்போகும் கோடை மழை.. சூறாவளிக்காற்று.. மீனவர்களும் கவனம்!

தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.  தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி  பகுதிகளில் ஒருசில  இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை  பொதுவாக இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது.   தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

அதிக பட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.6டிகிரி செல்சியஸ் மற்றும்  ஈரோட்டில் 40.0டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர  தமிழக  உள்  மாவட்டங்களின்  சமவெளி பகுதிகளில்     37டிகிரி முதல் 40டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ்   மற்றும் மலைப் பகுதிகளில் 21 டிகிரி முதல் 31 டிகிரி  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. 
சென்னை மீனம்பாக்கத்தில் 36.0 டிகிரி செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.9 டிகிரி செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப்பகுதிகளில் ஒருசில  இடங்களிலும்,  ஏனைய தமிழக பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியது. புதுவையில்  வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செமீ)குன்னூர் PTO (நீலகிரி) 12, குன்னூர் (நீலகிரி) 9, சேர்வலாறு அணை (திருநெல்வேலி) 8, மாஞ்சோலை (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி) தலா  7, நாலுமுக்கு (திருநெல்வேலி) 6, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) தலா 4, பர்லியார் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), குந்தா பாலம் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 3, கருப்பாநதி அணை (தென்காசி), அடவிநயினார் அணை (தென்காசி), தென்காசி AWS (தென்காசி) தலா  2, தென்காசி (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஆயிக்குடி (தென்காசி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), கெத்தை (நீலகிரி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), வலங்கைமான் (திருவாரூர்), பாம்பன் (ராமநாதபுரம்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 1. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
 
12.04.2024: தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13.04.2024: தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

14.04.2024 மற்றும் 15.04.2024: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
  
16.04.2023 முதல் 18.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 12.04.2024 முதல் 16.04.2024 வரை: அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அதிகபட்ச  வெப்பநிலையில்  பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்து வரும் மூன்று  தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை  படிப்படியாக உயரக்கூடும்.

12.04.2024 மற்றும் 13.04.2024: அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழகத்தில்  ஒருசில  இடங்களில் 2டிகிரி முதல் 3டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்  33 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

14.04.2024 முதல் 16.04.2024 வரை: அதற்கு அடுத்து வரும் மூன்று  தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை  பெரும்பாலான இடங்களில்   2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்  34 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: 12.04.2024 முதல் 16.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 12.04.2024 மற்றும் 13.04.2024: குமரிக்கடல் பகுதிகள், மன்னார்  வளைகுடா  மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும்  தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow