மதுரைக்கு இன்று வரும் அமித் ஷா... கோட்டை பைரவர் கோயிலுக்குச் சென்றபின் தான் ரோட் ஷோ

Apr 12, 2024 - 14:55
மதுரைக்கு இன்று வரும் அமித் ஷா... கோட்டை பைரவர் கோயிலுக்குச் சென்றபின் தான் ரோட் ஷோ

மதுரைக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோட்டை பைரவர் கோயிலுக்குச் சென்று, பின்னர் மதுரையில் வாகன பேரணியில் ஈடுபடுகிறார்.

இன்று மாலை 4.15 மணிக்கு தேர்தல் பரப்புரை செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம்  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடு காத்தான் செல்கிறார். 

அங்கிருந்து சாலை மார்கமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பைரவர் மற்றும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி சத்திய கேசவரதர் கோயிலில் மாலை 5.00 மணி முதல் 5.20 மணி வரை சாமி தரிசனம் செய்கிறார் 

அதன் பின்னர் மீண்டும் கானடு காத்தான் சென்று ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். அங்கே மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விளக்குத்தூண் சந்திப்பு வரை மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து மாலை 6.20 முதல் 7.00 மணி வரை வாகன பேரணியில் ஈடுபடுகிறார். வாகன பேரணி முடிந்த பின்னர் விமான நிலையம் சென்று அங்கிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார் அமித்ஷா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow