சேலத்தில் 108 டிகிரி.. 15 இடங்களில் சதமடித்த வெயில்.. இந்த நேரத்தில் வெளியே சுற்றாதீங்க.. வெப்ப பக்கவாதம் வருமாம்
தமிழ்நாட்டில் இன்று 15 ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தை விட இன்று பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தது. அனலை கக்கியது சூரியன். இன்றைய தினம் அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பமானது பதிவாகி உள்ளது.
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 100.94°F, கோயம்பத்தூர் 102.56°F, தர்மபுரி 105.8°F, ஈரோடு 107.6°F, கரூர் பரமத்தி 106.7°F, மதுரை நகரம் 105.8°F, மதுரை விமான நிலையம் 103.82°F, நாமக்கல் 104.9°F, தஞ்சாவூர் 102.2°F, திருப்பத்தூர் 106.88°F, திருச்சிராப்பள்ளி 104.18°F, திருத்தணி 103.64°F, வேலூர் 106.7°F, பாளையங்கோட்டை 102.2°F வெப்பமானது பதிவாகியுள்ளது.
உள்மாவட்டங்களில், அடுத்த 4 தினங்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் இப்போதே எச்சரித்திருக்கிறது.. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக்கூடும். முக்கியமாக, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும். கடலோர பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடல் காற்று உள்ளே வரும்போது வெப்ப நிலை குறையும். எனவே, பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் வயல் வெளியில் வேலை செய்பவர்கள் கூலித் தொழிலாளர்கள், மூட்டைத் தூக்குபவர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.. அதேபோல, ஓட்டப் பயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் கூட கவனமாக அதில் ஈடுபட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
What's Your Reaction?