ஹார்முஸ் ஜலசந்திக்கு தனது பெயரை சூட்ட வேண்டும்: அடம் பிடிக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்
ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்றும் தனது பெயரை சூட்ட வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இந்த பாதையை பயன்படுத்தும் கப்பல்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்க ஈரான் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அமெரிக்காவும் மற்ற சர்வதேச நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் ஹார்முஸ் ஜலசக்தி வழித்தடத்தில் இயல்பான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை 'டிரம்ப் ஜலசந்தி' என்று பெயரிட்ட ஒரு வரைபடத்தை தன் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஹார்முஸ் என்ற பெயர், அப்பகுதியில் 13 முதல் 16ம் நூற்றாண்டுகளில் செல்வாக்குடன் திகழ்ந்த பண்டைய துறைமுக நகரமான 'ஹார்முஸ்' நகரிலிருந்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பெயரை மாற்ற டிரம்ப் பதிவிற்கு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
What's Your Reaction?