USA: ஹஸ் வழக்கு - விசாரணை நடத்த நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு...சிக்கலில் டிரம்ப்...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பண மோசடி வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க மறுப்பு தெரிவித்துள்ள நீயூயார்க் நீதிமன்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணையை தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2016-ல் அதிபர் தேர்தலுக்காக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். அப்போது, ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், தான் 2006ஆம் ஆண்டு முதல் டிரம்புடன் உறவில் இருப்பதாகவும், தற்போது ஒரு குழந்தை இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் தேர்தல் சமயத்தில் இதுகுறித்து வாய் திறக்காமல் இருக்க டிரம்பின் வழக்கறிஞர் மைக்கெல் கோகன் தனக்கு ஒரு கோடி ரூபாயை (இந்திய மதிப்பில்) வழங்கியதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். இவ்வகையில் பணம் தருவதை அமெரிக்காவில் ஹஸ் பணம் என சொல்லப்படுகிறது.
ஹஸ் பணம் வழங்கியது அமெரிக்க சட்டபடி விதிமீறல் இல்லை என்பதால், டிரம்பை இந்த குற்றச்சாட்டு பாதிக்கவில்லை.அதேசமயம் 2017ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அமெரிக்க அதிபரானா நிலையில் ஸ்டார்மி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதனிடையே டிரம்பின் வழக்கறிஞர் மைக்கெல் இவ்வாறு வழங்கப்பட்ட பணத்தை(ஹஸ் பணம்), செலவுகளுக்கான பணத்தை திருப்பி செலுத்தல் கணக்கில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற விசாரணையின் போது சட்டக் கணக்களுக்காக பணம் செலுத்துவதாகக் கூறி தனது வணிகப்பதிவுகளை டிரம்ப் பொய்யாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு (2024) நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான தீவிர பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 3 மாதத்திற்கு தள்ளி வைக்கக்கோரி மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அவர் மனுவும் அளித்திருந்தார். அதற்கு மேன்ஹாட்டன் நீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கு எதிராக நியூயார்க் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், மேன்ஹாட்டன் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததோடு, வரும் ஏபர்ல் 15ஆம் தேதி வழக்கின் விசாரணை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அந்நாட்டு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
What's Your Reaction?