முழு சூரிய கிரகணம்.. மன குழப்பத்தில் குடும்பத்தையே காவு வாங்கிய அமெரிக்கா இளம் பெண்

முழு சூரிய கிரகண நாளில் ஏற்பட்ட மன குழப்பத்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு ஓடும் காரில் இருந்து குழந்தைகளையும் வீசி கொலை செய்துள்ளார். அமெரிக்காவில் நிகழ்ந்த இந்த சம்பவம் இணைய உலகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Apr 11, 2024 - 15:05
முழு சூரிய கிரகணம்.. மன குழப்பத்தில் குடும்பத்தையே காவு வாங்கிய அமெரிக்கா இளம் பெண்

முழு சூரிய கிரகண நாளில் வெளியே செல்ல வேண்டாம் என்று ஆன்மீகவாதிகள் கூறுவார்கள். அசைவ உணவு தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் சொல்வார்கள். அதற்குக் காரணம் கதிர்வீச்சினால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என்பதனால்தான் வெளியே செல்லக்கூடாது வீட்டிலேயே அமைதியாக அமர்ந்திருங்கள் என்று சொல்வதன் காரணமாகும்.

கடந்த 8ஆம் தேதி இரவு வட அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இது ஒரு குடும்பத்தையே காவு வாங்கி விட்டது. அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல் நகரில் வசித்து வந்தவர் டேனியல் ஜான்சன்,34. அயோகா என்ற பெயரில் இவர் ஜோதிடம் குறித்து இணையதளங்களில் எழுதி வந்தார். 

முழு சூரிய கிரகணம் குறித்து தனது இணைய தள பக்கத்தில் பதிவிட்ட டேனியல் ஜான்சன், மன குழப்பத்துடன் பதிவிட்டிருந்தார். நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய வேண்டிய நேரமிது என்று தனது எக்ஸ் தளப்பக்கத்திலும் கவலையுடன் பதிவிட்டிருந்தார்.

சூரிய கிரகணத்தால் மன குழப்பத்தோடும் கவலையோடும் இருந்த டேனியல் ஜான்சன் ஏப்ரல் 8ஆம் தேதி திங்கட்கிழமையன்று  அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். டேனியல் ஜான்சனின் கணவர், அமெரிக்காவில் விமானப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஒருவிதமான மனநிலையில் இருந்த டேனியல் ஜான்சன், காரில் ஏறி கிளம்பினார். கூடவே தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றார். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணம் செய்தார். அப்போது இரண்டு குழந்தைகளை காரில் இருந்து வீசிக் கொலை செய்தார். 9 வயதான குழந்தையும், 8 மாதங்களே ஆன குழந்தையும் துடிதுடித்து உயிரிழந்தன. அதே வேகத்துடன் காரை ஓட்டிச் சென்று ஒரு பெரிய மரத்தில் மோதி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிட நம்பிக்கையில் மூன்று பேரை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow