ஆஹா.. ஆஹா.. கல்யாணம்...கோலாகலமாக நடந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம்... 

தியாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Feb 20, 2024 - 12:01
Feb 20, 2024 - 12:18
ஆஹா.. ஆஹா.. கல்யாணம்...கோலாகலமாக நடந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம்... 

நடிகர் விஜயகுமாரின் பேத்தியும், நடிகர் அருண்விஜய்யின் அக்கா மகளுமான தியாவின் திருமணம் நேற்று (19.02.2024) கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜயகுமாருக்கும் முதல் மனைவியான முத்து கண்ணுவுக்கும் கவிதா, அனிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள். இதில் இரண்டாவது மகளான அனிதாவின் மகள் தான் தியா. தனது தாயைப் போன்றே தியாவும் வெளிநாட்டில் மருத்துவம் படித்துள்ளார். 

வெளிநாட்டிலேயே செட்டில் ஆன இவர்கள், தியாவின் திருமணத்திற்காக சென்னையில் முகாமிட்டுள்ளனர். தியாவின் நிச்சயதார்த்தம், மெஹந்தி கொண்டாட்டம் என பல வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா என பல பிரபலங்களுக்கும் இத்திருமணத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நேற்று (19.02.2024) அன்று இவர்களது திருமணம் ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் கோலாகலமாக நடந்துள்ளது. இதே ரெசார்ட்டில் தான் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தியாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையில், குடும்பத் தகராறு காரணமாக நீண்ட வருடங்களாக பிரிந்து இருக்கும் வனிதாவிற்கு இத்திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. அதற்காக வருத்தப்படாத வனிதா, ”தனது சமூக வலைதளத்தில், ஒட்டு மொத்த கூட்டம் ஒரு இடத்தில் சேரும் போது, நீங்கள் மட்டும் தனியாக இருந்தால், நீங்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow