மேற்குவங்கத்தில் ஆதாரில் சிக்கல்..பிரதமருக்கு மம்தா கடிதம்..! புகாருக்கு Gmail ஐடி கொடுத்த அமைச்சர்..!

தகுதிவாய்ந்த பயனாளிகளின் நலத்திட்டங்களுக்கு தடைவிதிக்க சதி நடக்கிறது.

Feb 20, 2024 - 11:53
மேற்குவங்கத்தில் ஆதாரில் சிக்கல்..பிரதமருக்கு மம்தா கடிதம்..! புகாருக்கு Gmail ஐடி கொடுத்த அமைச்சர்..!

மக்களவைத் தேர்தலுக்கு முன், தகுதிவாய்ந்த பயனாளிகளின் நலத்திட்டங்களுக்கு தடைவிதிக்கும் சதி எனக்கூறி மேற்குவங்கத்தில் அட்டவணை, பழங்குடியின, OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். 

மேற்குவங்கத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ள அட்டவணை, பழங்குடியின, OBC பிரிவைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் ஆதார் அட்டைகள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டன. 

இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய அமைச்சர் ஷாந்தனு தாகூர், தொழில்நுட்பக் கோளாறால் தவறு நடந்ததாகக் கூறியதோடு புகாருக்காக gmail முகவரியை வெளியிட்டதும் சர்ச்சையானது. தொடர்ந்து ஆதார் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மாநில அரசை சற்றும் ஆலோசிக்காமல் மத்திய அரசு நேரடி நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது எனவும் ஏராளமான மக்கள் நிவாரணத்துக்காக அலுவலகங்களில் குவிந்து வருவதாகவும் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அச்சத்தில் உள்ளதாகவும் ஆதார் கார்டு செயலிழப்புக்கான காரணம் என்ன என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன், தகுதிவாய்ந்த பயனாளிகளின் நலத்திட்டங்களுக்கு தடைவிதிக்க சதி நடப்பதாகவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow