அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு..?   ICU-வில் தீவிர சிகிச்சையா?  

Oct 24, 2024 - 21:56
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு..?   ICU-வில் தீவிர சிகிச்சையா?    

 அமைச்சர் துரைமுருகன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுகவின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வலத்துறை அமைச்சராகவும் உள்ள மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு தற்போது 86 வயதாகிறது. 

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் இவர் இன்று சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக காட்பாடியிலிருந்து  சென்னைக்கு வந்தே பாரத் ரயில் மூலம் பயணிக்கத் திட்டமிட்டு அதன்படி  வந்துகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு 
வருவதாக தகவல். எனினும், மருத்துவமனை தரப்பிலிருந்து அவரது உடல்நிலை குறித்து எந்த ஒரு தகவலும் அளிக்கப்படவில்லை.

 திமுகவில் பல ஆண்டுகளாக முக்கிய  பதவி வகித்து வரும் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது  திமுகவினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க  |  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்கப்பட்டதா?... ஆதாரத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow