கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்: எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய அதிமுகவில் ஐடி விங்க்
வருங்காலத்தில் அதிமுகவில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என ஐடி விங்க் பதிவினால் எடப்பாடிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் எனது எக்ஸ் பதிவில், அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராக நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக கழக பணி ஆற்றக்கூடிய கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், "கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்" என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் கழகத்திற்கு எதிரான சிலரின் நடவடிக்கைகளால் இன்று ஒரு தூய தொண்டரை நாம் இழந்திருக்கிறோம். இது அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள் தான் இந்த இயக்கத்தின் உயிர் நாடி. இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம்.
தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். மறைந்த தம்பி கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம். என கூறியுள்ளார். அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பிளவு ஏற்பட்டு, எடப்பாடி தரப்புடன் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக ஐடி விங்கில் இருந்து போர்க்குரல் எழுந்திருப்பது எடப்பாடிக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?