தமிழ் புத்தாண்டுக்கு எப்பவுமே வாழ்த்துவது இல்லை... சர்ச்சைக்கு ஆவின் முற்றுப்புள்ளி

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து அச்சிடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

Apr 16, 2024 - 09:18
தமிழ் புத்தாண்டுக்கு எப்பவுமே வாழ்த்துவது இல்லை... சர்ச்சைக்கு ஆவின் முற்றுப்புள்ளி

ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியில் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறிப்பாக பொங்கல், தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறி பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டிற்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வமும், பிரசாரத்தின் போது, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளை ஆவின் பால் பாக்கெட்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடக்கூடிய தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து,பால் பாக்கெட்களில் இடம் பெறவில்லை. அந்த வகையில், தமிழர்களுக்கு எதிரான கட்சி திமுக என்று குற்றம்சாட்டி பரப்புரை மேற்கொண்டார். 

இது சர்ச்சை ஆன நிலையில், வாழ்த்து தெரிவிக்கப்படாதது ஏன் என்பது குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  அதில் ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில், பால் பாக்கெட்களில் வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு விநியோகித்து வருகிறது. இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். ஆனால், தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்படவில்லை. எனவே, இந்த ஆண்டும் அச்சிடப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow