காலையில் விர்ர்ர்ர்ர்… மாலையில் சர்ர்ர்ர்ர்: தங்கம் சவரனுக்கு ரூ 800 குறைவு 

காலையில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் , மாலையில் சவரன் ரூ 800 குறைந்து இருக்கிறது. 

காலையில் விர்ர்ர்ர்ர்… மாலையில் சர்ர்ர்ர்ர்: தங்கம் சவரனுக்கு ரூ 800 குறைவு 
தங்கம் சவரனுக்கு ரூ 800 குறைவு 

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.345க்கும் விற்பனையாகிறது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை ஒரு பவுன் ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் சவரனுக்கு ரூ.3,600 அதிகரித்து ரூ.1,11,200க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை சற்று சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஒரு சவரன் விலை ரூ.1.14 லட்சத்திற்கு கீழ் சென்றது.

ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலையில் மாலையிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.345க்கும் விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow