தங்கம் சவரனுக்கு ரூ. 160 அதிகரிப்பு : வெள்ளி விலையும் உயர்வு
தங்கம் இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. இதே போன்று வெள்ளியும் கிராம் ரூ 5 உயர்ந்து உள்ளது. இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சென்னையில் இன்று (டிச.,03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,01) ஆபரண தங்கம் கிராம், 12,070 ரூபாய்க்கும், சவரன், 96,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 196 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிச.,02) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 12,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் குறைந்து, 96,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.,03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.201க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
What's Your Reaction?

