விஜய் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு : செல்வபெருந்தகை மழுப்பல் பதில் 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ராகுல்காந்தி தூதர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசிய விஷயம் தனக்கு தெரியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மழுப்பல் பதிலளித்துள்ளார். 

விஜய் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு : செல்வபெருந்தகை மழுப்பல் பதில் 
செல்வபெருந்தகை மழுப்பல் பதில் 

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில், ராகுல்காந்தியின் தூதர் சந்தித்து பேசியிருந்தார். கூட்டணி தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக தவெக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ராகுல்காந்தி தூதர் விஜய் சந்திப்பு திமுகவை மட்டுமல்ல தமிழக காங்கிரஸ் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்க அளித்த பேட்டியில் கூறியதாவது , "விஜய்யுடன் பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு பற்றி எனக்குத் தெரியாது,

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை, பேசவும் சொல்லவில்லை. இந்தியா கூட்டணி பலமாக உள்ளது, எங்களுடைய தலைமை என்ன சொல்கிறதோ அதைதான் செய்கிறோம். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 

பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சென்று சந்தித்தற்கு ஏதேனும் புகைப்படங்கள் இருக்கிறதா? அப்படி அவர் சந்தித்திருந்தால் தலைமை அதுகுறித்து முடிவு செய்யும்" இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தின்போது விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விஜய் உடன் ராகுல் காந்தி தூதர் சந்திந்து பேசியிருப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow