கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை: 8 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை செய்து விவகாரத்தில் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதி கேசவன் (20). ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி ஆதி மீது கொலை , அடிதடி உட்பட 10 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ரவுடி ஆதியும் வில்லிவாக்கம் பொண்ணாங் கிணறு தெருவை சேர்ந்த சாருமதி (23) என்பவருடன் தவறான உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சாருமதிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ள நிலையில் இவர் ரவுடியுடன் தகாத உறவில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. நேற்று இரவு சாருமதி தனது கள்ளக்காதலன் ரவுடி ஆதியை செல்போனில் தொடர்பு கொண்டு தனது தோழியான ஆவடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சுசித்ரா(21) என்பவருக்கு கடந்த 18 ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது என்றும் திடீரென அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன் தோழி சுசித்ராவுக்கு யாரும் ஆதரவு இல்லாததால் அவருடன் மருத்துவமனையில் தங்கி இருப்பதாகவும் நீ உடனே மருத்துவமனைக்கு வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதலி சாருமதி கேட்டுக் கொண்டதன் பேரில் ரவுடி ஆதி இரவு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு ஆதிக்கு மது வாங்கி கொடுத்து மதுபோதையில் தன்னுடன் தூங்க வைத்துள்ளார் சாருமதி. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நியூ லேபர் வார்டு அருகே ரவுடி
ஆதி தன் கள்ளக்காதலியுடன் தூங்கி கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஆதியை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி என்ற ஆதிகேசவன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?

