ஆண்டிபட்டியா யார் சொன்னது, ஆளை விடுங்கடா சாமி நான் தேர்தலில் நிற்கல: டிடிவி தினகரன் சொன்ன அப்டேட்!

வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்றும் என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து அவர்களை அமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆண்டிபட்டியா யார் சொன்னது, ஆளை விடுங்கடா சாமி நான் தேர்தலில் நிற்கல: டிடிவி தினகரன் சொன்ன அப்டேட்!
நான் தேர்தலில் நிற்கல: டிடிவி தினகரன் சொன்ன அப்டேட்!

தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊழலை ஒழிப்போம் என்று பேசும் விஜய், தனது படத்திற்கான டிக்கெட் பிளாக்கில் விற்பதை எப்போதாவது தடுக்க முடிந்ததா? 100 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய் வரை விற்பதை ஒழிக்காதவர் நாட்டின் ஊழலை எப்படி ஒழிப்பார்? வீட்டினுள் அமர்ந்து கொண்டு கொள்கை எதிரி, புடலங்காய் எதிரி என்று பேசி வரும் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரட்டும்.

ஓபிஎஸ் -ம் அம்மாவின் உன்மை தொண்டர். அவரும் வருவார் என நம்புகிறேன். ஓபிஎஸ் தர்ம யுத்தம் துவங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில் ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வந்திருப்பார் இது உங்களுக்கே தெரியும். ஓபிஎஸ்க்கு சில தர்ம சங்கடங்கள் உள்ளது. 

2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கு உன்மையான விடியல் வர உள்ளது. அண்ணன் ஈபிஎஸ் தலைமையை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். எங்களை யாரும் மிரட்டியோ அழுத்தம் கொடுத்தோ கூட்டணியில் இணைய வைக்கவில்லை.

ஊழல் என்றால் நினைவிற்கு வருவது திமுக தான். மாஃபியா மற்றும் ரவுடி ராஜாங்கம் தான் நடைபெறுகிறது. போதை மருந்து கடத்தலில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக மாறி வருகிறது.  கங்காரு குட்டி போல் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் துணை முதல்வர் எங்களை விமர்சிக்கிறார். தாலிக்கு தங்கம், லேப்டாப் என ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டத்தையும் நிறுத்திவிட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow