ராகுல்காந்தி கேள்விக்கு பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய எல்லை பகுதிகளில் சீன ஆக்ரமிப்பு தொடர்பாக ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் பாஜக-காங்கிரஸ் எம்பிக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் காகிதங்களை கிழித்து எரிந்ததாக காங்கிரஸ் உள்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி போராட்டம் நடத்தி இருந்தார். இதனிடையே முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?
அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான கேள்விகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எட்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச அவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கும் வகையில் மீதான இடைநீக்க நடவடிக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?

