சென்னை கிண்டி மெட்ரோ ஸ்டேஷனில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : குடிபோதை ஆசாமிக்கு போலீஸ் வலை
சென்னை கிண்டி மெட்ரோ எதிரே குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த நபர். கையும் களவுமாக பிடித்து பெண் தட்டிக்கேட்ட பெண். பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இருந்த போதிலும், குற்றங்கள் குறைவதாக இல்லை. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் செயல்கள் அதிகரித்து வருகின்றன. அதில் பெண்களில் பலர் தங்களுக்கு எதிரான பாலியல் செயல்களை குறித்து புகார் அளிப்பது கிடையாது. அப்படி பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எதிரே பழச்சாறு கடைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு பெண்களை குடிபோதையில் வந்த இருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணே குடிபோதையில் இருந்த அந்த நபரை தேடிச்சென்று தட்டிக் கேட்டுள்ளார்.
அந்த நேரத்தில் கூட பெண் போலீசார் ஒருவருக்கு இதே போன்று பாலியல் தொந்தரவு செய்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
சென்னை காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து அளிக்கப்பட்ட இந்த புகார் குறித்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைராலகி பரவி வருகிறது.
What's Your Reaction?

