நடிகை வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம்?-இன்ஸ்டாவில் போட்ட பதிவு

இது வனிதாவுக்கு 4வது திருமணம் எனக் கூறப்படுகிறது.

Oct 1, 2024 - 16:36
நடிகை வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம்?-இன்ஸ்டாவில் போட்ட பதிவு
நடிகை வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம்?-இன்ஸ்டாவில் போட்ட பதிவு

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் நடிகையாக வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஆரம்ப காலத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடித்த வனிதா விஜயகுமார், நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்தார். அதன் பின்னர், நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். அதன்பின்னர் ராஜன் என்பவரை 2வதாக திருமணம் செய்தார். ராஜன் -வனிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த உறவும் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின்னர் நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து, பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் கொண்டார். ஆனால் சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதைத்தொடந்து உடல்நலக்குறைவால் பீட்டர் பால் உயிரிழந்தார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும் தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக வனிதா விஜயகுமார் அப்போது தெரிவித்திருந்தார். முன்னதாக பீட்டர் பாலின் மனைவி தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதா விஜயகுமாருடன் வாழ்ந்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார். 

இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தனது நீண்ட கால நண்பரும், நடன இயக்குநருமான ராபர்ட்டை வருகிற அக்.5ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இது வனிதாவுக்கு 4வது திருமணம் எனக் கூறப்படுகிறது. ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் அழைப்பிதழைதான் வெளியிட்டுள்ளரா அல்லது இருவரும் நடித்துள்ள படத்தின் ப்ரமோஷனுக்கா வெளியிட்டுள்ளாரா என்பது தெரியவில்லை. இது குறித்து அக்.5ம் தேதி தான் உறுதியான தகவல் தெரியவரும். 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow