2024 Election: குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா… ஜனநாயக கடமையாற்றிய விக்ரம், வடிவேலு, அனிருத்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் சூர்யா, கார்த்தி, சீயன் விக்ரம், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.

Apr 19, 2024 - 16:57
2024 Election: குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா… ஜனநாயக கடமையாற்றிய விக்ரம், வடிவேலு, அனிருத்

சென்னை: ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் வரிசையில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் சூர்யா, சீயான் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட மேலும் சில நட்சத்திரங்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். சூர்யா, கார்த்தி, அவர்களது தந்தையும் நடிகருமான சிவகுமார் ஆகியோர் குடும்பமாக சென்று வாக்களித்தனர். அதேபோல், சீயான் விக்ரமும் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார். 

அதேபோல், இசையமைப்பாளார்கள் அனிருத், விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். காமெடி நடிகர்கள் வடிவேலு சாலிகிராமத்திலும், சந்தானம் பம்மல் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியிலும் தங்களது வாக்குகளை செலுத்தினர். மேலும், நடிகர்கள் பரத், பாபி சிம்ஹா, நடிகைகள் ஜனனி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் ஷங்கர், பா ரஞ்சித் ஆகியோரும் வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டுப் போட்டனர்.  

நடிகர் சூரி தனது மனைவியுடன் ஓட்டுப் போட வாக்குச் சாவடிக்குச் சென்றார். ஆனால், சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாததால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார். இதுபற்றி தனது டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், இதுவரை அனைத்து தேர்தலிலும் ஓட்டுப் போட்டுள்ளேன், இந்த முறையும் வாக்களிக்க வேண்டும் என நினைத்து இங்கு வந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்பதால் ஓட்டுப் போட முடியவில்லை. இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. அடுத்தத் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிப்பேன் எனக் கூறிச் சென்றார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow