நடிகர்களைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கும் குறி? தொடரும் பிஷ்னோய் கும்பலின் அட்டூழியம் !

நடிகர்களைத் தொடர்ந்து அரசியல் தலைவருக்கும் குறிவைத்த மர்ம கும்பல், தற்போது, முன்னாள் முதலமைச்சரிடம் ரூ.7 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nov 12, 2026 - 16:11
நடிகர்களைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கும் குறி? தொடரும் பிஷ்னோய் கும்பலின் அட்டூழியம் !
Delhi EX CM Kejriwal Gets Life Threat !

நடிகர்களைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களுக்கும் குறிவைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்.. ரூ.7 கோடி கொடுக்காவிட்டால் அரவிந்த் கெஜ்ரிவாலையும், அவரது மகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடி பணம் கொடுக்காவிட்டால் கெஜ்ரிவாலையும் அவரது மகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

ரூ.7 கோடி கேட்டு மிரட்டல்!

இந்த சம்பவம் தொடர்பாக திலக் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜர்னைல் சிங் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்ட ஒருவர், தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மிரட்டல் விடுத்த நபரிடமிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளும், வாட்ஸ்அப் செய்திகளும் வந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். ரூ.7 கோடி பணம் வழங்காவிட்டால் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவரது மகளையும் கொலை செய்துவிடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

நடிகர்களைத் தொடர்ந்து அரசியல் தலைவருக்கும் குறி?

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்பான மிரட்டல் சம்பவங்கள் ஏற்கனவே திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மும்பையில் நடிகர்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக பல்வேறு சம்பவங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த நடிகர் ஜாக்கி ஷெராஃப் மீது மூன்று பேர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் சிறிய காயங்களுடன் அவர் உயிர் தப்பினார் .

இந்நிலையில், தற்போது அரசியல் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை தீவிரம்

சட்டமன்ற உறுப்பினர் ஜர்னைல் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், மொஹாலி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மிரட்டல் விடுத்த நபர் யார்? அவர் உண்மையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவரா? மிரட்டல் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடிகர்களைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள இந்த தகவல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow