கலிஃபோர்னியாவில் அருளும் கணபதி

அயல்நாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறோம் என்று ஆண்டவன் வழிபாடைக்கூட இங்கே பலரும் தொலைத்துக் கொண்டிருக்க, அங்கே வாழ்பவர்களோ தெய்வ வழிபாடே முக்கியம் என்று நினைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

கலிஃபோர்னியாவில் அருளும் கணபதி
பக்தி ஸ்பெஷல்

அயல்நாட்டுக் கோயில்.

அந்த வகையில் வளர்ந்த பெரும் நாடான அமெரிக்காவில் ஏராளமான இந்துக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் பிரசிதமானது, கலிபோர்னியாவில் ஃப்ரீமான்ட் (Fre-mont) என்னுமிடத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் வெறும் கோயிலாக மட்டுமன்றி. இதன் நிர்வாகம் நிறைய அறப்பணிகளையும் செய்து வருகிறது.
2013ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலில் நடு நாயகமாக விநாயகர் கம்பீரமாக அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து, சிவபெருமான் லிங்க வடிவில் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அன்னை பார்வதி விஷ்ணு துர்க்கையாக விநாயகருக்கு இடப்புறத்திலும், தம்பி சுப்பிரமணியன் வலப்புறத்திலும் காட்சியளிக்கிறார்கள்.
அவர்களையடுத்து, ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளும் தன் பரிவாரங்களுடன் இக்கோயிலில் இடம்பிடித்துள்ளார்.

லக்ஷ்மி நரசிம்மரும், அன்னை மகாலட்சுமியும் தனி சன்னதிகளில் அருள்புரிகிறார்கள். குருவாயூரப்பனும் பஞ்சமுக ஆஞ்சநேயரும் இருக்கிறார்கள். குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் வைபவமும், அன்னப்பிராசனமும் குருவாயூரப்பன் சன்னதியில் தினம்தினம் நடக்கின்றன.
ஐயப்பனுக்கும் நவகிரஹங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. + ஷீரடி சாயிபாபாவுக்கும் சன்னதி இருக்கிறது.
சிவனுக்கு தினமும் காலையில் அபிஷேகம் நடை பெறுகிறது. அர்ச்சனை, மந்திரபுஷ்பம், மஹா மங்கள ஆரத்தி ஆகியவை காலை மற்றும் நடத்தப் படுகின்றன் மாலை வேளைகளில் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 7.00 ம ணி க் கு சுக்கார கணபதி  எங்கே இருக்கு சஹஸ்ரநாமம் நடைபெறும். வியாழக்கிழமைகளில் சாயிபாபா ஆரத்தி பக்தர்கள் எல்லாருக்குமே ஆரத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். வெள்ளிக் கிழமைகளில் விஷ்ணு துர்க்கைக்கு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறும்.

மாலையில் மகாலஷ்மிக்கு அபிஷேகம் சனிக்கிழமை வெங்கடேச சுப்ரபாதம் பெருமாளுக்கு திருமஞ்சனம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம். நண்பகலில் நவக்ரஹங்களுக்கு அபிஷேகமும், மாலையில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமை காலை விநாயகருக்கு அபிஷேகம் மாதம்தோறும் சத்ய நாராயண பூஜை சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன.

பிரான்சிஸ்கோ தேச விமான ந்தில் இருந்து - 34 மைல் ல் பிளாக்வூட் பிரீமாண்ட், யாவில்உள்ளது விநாயகர் சதுர்த்தி, சூரசம்ஹாரம், வைகுண்ட ஏகாதசி, தைபூசம், கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராமநவமி, நவராத்திரி, சிவராத்திரி, ஐயப்ப பூஜை. வரலஷ்மி பூஜை, தமிழ் வருடப் பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு, ஆங்கில வருடப் பிறப்பு என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர்.

இங்கேயுள்ள கோயில்களின் சிறப்பு என்னவெனில் நாமே வீட்டில் பக்தியோடு பிரசாதம் செய்து எடுத்துப்போய் . நைவேத்தியம் செய்து அனைவருக்கும் வழங்கலாம். பூமாலை தொடுக்கவென்றே தன்னார்வலர் பெண்கள் வாரத்தில் ஒரு நாள் குழுவாக வருகின்றனர். பக்தர்கள் எத்தனை கூட்டமிருந்தாலும் முண்டியடிக்காமல், வரிசையில் நின்று பொறுமையாக தரிசனம் செய்கின்றனர். அபிஷேக ஆராதனைகளை அமைதியாக அமர்ந்து தரிசிக்கிறார்கள்.
கோயில் வளாகத்திலேயே சிறிதும், பெரிதுமாய் ஹால்கள் இருக்கின்றன. அவற்றில் ஆயுஷ்ஹோமம் போன்ற சின்னச்சின்ன இல்ல விழாக்கள் கூ நடக்கும். அது தவிர பெரிய ஹாலில் பஜனைகள், நாராயணியம் பாராயணம் போன்றவையும் நடக்கின்றன. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சந்தியாவந்தனம், விஷ்ணுசகஸ்ரநாமம் போன்றவை தன்னார்வலர்களால் கற்பிக்கப்படுகின்றன.

வேண்டுதலுக்காக என்று இல்லாமல், பாரம்பரியமும் பண்பாடும் மாறாமல் தெய்வங்களை தரிசிக்கவும், தங்கள் குழந்தைகள் மனதில் பக்தியை விதைத்து வளர்க்கவும், ஏராளமானோர் இக்கோயிலுக்கு வருகிறார்கள். அதற்கு ஏற்ப இங்கே பக்தி மணத்துடன் கடவுள்களின் அருளும் நிறைந்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow