குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மகர ராசிக்காரர்களே.. வெற்றி மீது வெற்றி வீடு தேடி வரும்

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 13, 2024 - 15:17
குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மகர ராசிக்காரர்களே.. வெற்றி மீது வெற்றி வீடு தேடி வரும்

தன்னம்பிக்கையை வளர்த்துகிட்டா, தடைகள் தவிடுபொடி ஆகக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமை உரியவர்களால் உணரப்படும்க. உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. சிலருக்கு முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்பு வரும்க. அப்படிச் செல்லும் சமயத்துல உரிய நடைமுறைச் சட்டங்களை கவனமாகக் கடைபிடியுங்க. மேலதிகாரிகளிடம் பேசும்போது, வீண் ரோஷம் தவிருங்க. பெருமைகள் வரும் சமயத்துல் வீண் களியாட்டம் தவிருங்க. நல்லவை தொடரும்.

வீட்டுல நிம்மதி நிலவும்க. தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும்க. குலதெய்வத்தை முறையாக வழிபட்டா, சுபகாரியத்தடைகள் நீங்கும்க.  பூமி, வாகனம் வாங்கற சமயத்துல பத்திரங்களை முழுமையாக ஆராயாம ஏற்றுக்க வேண்டாம்க. பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டுங்க. வாரிசுகள் வாழ்க்கைல வசந்தம் வரும்க. பணவரவு அதிகரிச்சாலும் செலவுகளும் சேர்ந்துவரும்க. அதைஅசையும் அசையா சொத்தாக சேமிக்கறதும்தான் புத்திசாலித்தனம்க. 

செய்யும் தொழில்ல  முதலீடுகள்கூட திடீர்னு முடுக்கிவிடப்பட்டு லாபம் தரத்தொடங்கும்க. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செழிக்கும்க. இந்த சமயத்துல சிலரோட சூழ்ச்சி உங்களை சட்டவிரோதச் சிக்கலை சந்திக்க வைக்கலாம்க. உரிய வரிகளை முறையாக செலுத்திடறதும், அரசுவழி அனுமதிகளை தவறாமப் பெறுவதும் பிரச்னை வலையில நீங்க சிக்காம இருக்க உதவும்க.

அரசு, அரசியல் சார்ந்தவங்க புதிய பாதையில புத்துணர்வோட நடக்க சந்தர்ப்பம் தேடிவரும்க. மேலிடத்தை கேலிசெய்யும் வார்த்தைகளை விளையாட்டாகச் சொன்னாலும் விபரீதம் விளைஞ்சுடலாம்க. பேச்சுல கவனமா இருங்க. தேவையில்லாத சமயங்கள்ல அமைதியே நல்லது உணர்ந்து அடக்கமா இருங்க. பதவி வரும்போது பணிவும் வந்துட்டா, பல்லாண்டு நிலைக்கும்க.

மாணவர்களுக்கு மதிப்பெண்ணும் மதிப்பும் உயரும்க. வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் மனம்போல அமையும்க. சிலருக்கு படிக்கும் காலகட்டத்துலே எதிர்கால பணிக்கான உத்தரவாதம் கிடைக்கும்க.

கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வரும்க. அவை புறம்பேசும் சிலரோட சூழ்ச்சியால  தடைபடவும் வாய்ப்பு உண்டு கவனமா இருங்க.

தொலைதூரப் பயணத்துல புதிய நட்புகளிடம் நெருக்கம் தவிருங்க. அலுவலகப் பயணங்கள்ல தஸ்தாவேஜுகளை பத்திரமா வைச்சுக்குங்க.

உடல்நலத்துல அக்கறை உள்ளவங்க தேவையற்ற டென்ஷனைத் தவிருங்க. கழுத்து, தோள்பட்டை, மூட்டு, முதுகுத்தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம்க. தூக்கத்தை முறைப்படுத்துங்க.

இந்த ஆண்டு முழுக்க, விநாயகனை வணங்குங்க. வாழ்க்கை வெளிச்சமா இருக்கும்.

 யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow