குரு பெயர்ச்சி பலன் 2024: மே மாதம் முதல் இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்

நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை மாதம் 18ஆம் தேதி மே 1ஆம் தேதி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

Apr 23, 2024 - 17:15
குரு பெயர்ச்சி பலன் 2024:  மே மாதம் முதல் இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்


மேஷம்: பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. மன குழப்பங்கள் நீங்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். அதிர்ஷ்டத்தையும் அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும். 

சிம்மம்: பத்தில் குரு பதவி யோகத்தை தருவார். குருவின் பார்வையால் நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும்.  புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடமாற்றங்கள் ஏற்படும். வேலையில் இருப்பவர்கள் பொறுப்புடனும் கவனத்தோடும் செயல்பட வேண்டிய நேரமாகும். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வண்டி வாகனம் வாங்கலாம்.

கன்னி:  குரு பகவான் கன்னி ராசிக்காரர்களுக்கு கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால்  சகல நன்மைகளும் நடைபெறும். திருமணம் சுபகாரியம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். வியாழக்கிழமை குருபகவானை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபேறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வியாபாரம் தொழிலில் புதிய இடமாற்றம் ஏற்பட உள்ளது. புதிய பொறுப்புகள் தேடி வரும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கப்போகிறது.

மகரம்: குரு பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு  வரப்போவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow