"அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர்.." – மோடிக்கு Birthday Wish செய்த முதலமைச்சர் விஜய்..!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sep 17, 2026 - 10:35
"அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர்.." – மோடிக்கு Birthday Wish செய்த முதலமைச்சர் விஜய்..!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதனை ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ள விஜய், “I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India. I wholeheartedly wish you a long life filled with good health” என தெரிவித்துள்ளார்.

https://x.com/CMOTamilnadu/status/2100431356882772451?s=20

ஏற்கனவே, பாஜகவுடன் மறைமுக கூட்டணி என்றும், விஜய் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், எங்கள் கொள்கை எதிரி பாஜக தான் என்று உறுதியாக கூறினார் முதலமைச்சர் விஜய். இந்த நிலையில்,  வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் என்று மோடி குறித்து புகழாரம் சூட்டியுள்ளது, தவெகவின் கொள்கை நிலைப்பாடு மாறிவிட்டதோ? மோடி சர்கார் தான் சிறந்த சர்கார் என்று விஜய் கூறுகிறாரோ? அப்போ பாஜக எதிர்ப்பு என்பது வெறும் ஓட்டு அரசியலுக்காக தானா? என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

குறிப்பாக, பாஜக- திமுக கள்ளக் கூட்டணி என்று தவெக குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக தலைவரான மு.க.ஸ்டாலினின் ட்வீட்டையும், பாஜகவை கொள்கை எதிரியாக கொண்டுள்ள முதலமைச்சரின் ட்வீட்டையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

பிறந்த நாள் வாழ்த்தில் கூட அரசியல் பார்க்கத் தேவையில்லை என்று தவெக தரப்பில் கூறப்பட்டாலும், நாங்கள் என்ன செய்தாலும் அரசியலாக்கும் தவெகவின் உண்மையான ரூபத்தை வெளிக் கொண்டு வரக் கூடாதா என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இப்படியாக, மோடி பிறந்தநாளிலும், தவெக Vs திமுக சண்டை தொடர்வது வேடிக்கையாகிவிட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow