ஒரே மாதத்தில் ஒரு கோடி பேர் பதிவு... சோலார் மின் திட்டம் குறித்து பிரதமர் பெருமிதம்...

Mar 16, 2024 - 10:58
ஒரே மாதத்தில் ஒரு கோடி பேர் பதிவு... சோலார் மின் திட்டம் குறித்து பிரதமர் பெருமிதம்...

சூரிய மின்சக்தியை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோலார் மின் திட்டத்தில், ஒரே மாதத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்திருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பேனல்கள் அமைக்க மானியமும், அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஜனவரி 22ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தும் இந்த திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சேமிப்பு கிடைக்கும் என்றும், உபரியாக உள்ள மின்சாரத்தை மாநில மின்சார வாரியத்துக்கு விற்பதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, சூரிய வீடுகள், இலவச மின்சார திட்டம் என்ற "பி.எம். சூரிய கர் முஃப்த் பிஜ்லி யோஜனா"  திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13ஆம் தேதி முறைப்படி அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், சூரிய மின்சக்தியை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், ஒரே மாதத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக பயனாளிகள் பதிவு செய்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow