உட்கட்சி தேர்தல்...அடம் பிடிக்கும் உதயநிதி... மவுனம் காக்கும் ஸ்டாலின்..

திமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தி, முக்கியப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தலை நடத்தாமல் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Nov 17, 2026 - 12:28
உட்கட்சி தேர்தல்...அடம் பிடிக்கும் உதயநிதி... மவுனம் காக்கும் ஸ்டாலின்..

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அடைந்த தோல்வி  கட்சி,  தலைவர் முகஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தோல்விக்கான காரணத்தை கண்டறிய சிற்புக்குழுவை அமைத்திருந்தார்.  36 பேர் இடம் பெற்றிருந்த அந்த குழு, 19 குழுக்களாக பிரிக்கப்பட்டு,  தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தது.
களப்ணியில் சறுக்கியது எங்கே?, உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட 14  கோள்விகளுடன் விசாரணை நடத்தப்பட்டது.

மாவட்டம் , தொகுதி வாரியாக  நிர்வாகிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு தலைமைக்கு அறிக்கை தரப்பட்டது. 
கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தாமல் விட்டது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக  கூறப்பட்டது.  

மேலும் கடந்த தேர்தலின் போது அறிவித்தப்படி, அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் கொடுக்காமல் தவிர்த்தது, கோயில்களில் அறங்காவல் நிர்வாகிகளை நியமித்ததில் ஏற்பட்ட பிரச்சினைகள் தோல்விக்கு காரணங்களாக,  இருந்ததாகவும் கூறப்பட்டது. குறிப்பாக விஜய்க்கு  இருந்து செல்வாக்கை   கருத்தில் கொள்ளாததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டதாக நிர்வாகிகள் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.  

சிறப்பு குழு அறிக்கையை பெற்று கொண்ட திமுக தலைமை, கட்சி நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும்,  70 வயதை கடந்த மாவட்ட செயலாளர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்  அறிவுறுத்தி இருந்தது. 

மேலும் பழையபடி , உடகட்சி தேர்தலை நடத்தி நிர்வாகிகள்  தேர்வு செய்யப்படுவார்கள், என்றும்  திமுக தலைமை அறிவித்திருந்தது.  அதன்படி திமுக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும்   சீனியர்கள்   ஓரங்கட்டப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் இதுநாள் வரை தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.  வட்ட செயலாளர்களில் தொடங்கி பல்வேறு பதவிகளை கொண்ட திமுகவில் ஒரு காலத்தில் உட்கட்சி தேர்தல், மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.ஆனால் தற்போது அப்படி நடத்தப்படுவது இல்லை.

இந்த நிலையில் சட்டமன்ற தோல்விக்கு பிறகு உள்கட்சி தேர்தலில் ஆர்வம் கட்டி வந்த திமுக தலைமை, தற்போது  அதை கிடப்பில் போட்டுள்ளது குறித்து, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. திமுகவை  பொறுத்தவரை, பல ஆண்டுகளாக சீனியர் ஆதிக்கம், மிகப்பெரிய குற்றச்சாட்டாக கூறப்பட்டு வருகிறது.  

 இதற்கு முற்றுப்புள்ளி வைத்து கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் இது நாள் வரை அது நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.  
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு  சில மாற்றங்களை கொண்டு வந்தார். 

 ஆனாலும், திமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாத நிலையில், அந்த பொறுப்புகளுக்கும் இளைஞர்களை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கையை உதயநிதி வலியுறுத்தி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பெரிய பொறுப்புகளில் இளைஞர்களை கொண்டு வந்து  கட்சியை இளம் தலைமுறையினர் கையில்  நகர்த்த வேண்டும் என்று, மு.க.ஸடாலினிடம், உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாகவும் தொடர்ந்து தகவல்கள வெளியாகி வருகின்றன. 

ஆனால் முதலில்  உட்கட்சி தேர்தலை நடத்த அதிக ஆர்வம் காட்டிய முக ஸ்டாலின், தற்போது மவுனம் காத்து வருகிறார். ஏன்னென்றால், ஆட்சியை இழந்துள்ள திமுக தற்போது அரசியல் ரீதியாக  பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.  ஊழல் புகார், வழக்குகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, கட்சியில் பிளவு ஏற்படாமால் கப்பாற்ற வேண்டிய  சூழல் உள்ளது.  அப்படி இருக்க உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டால், பதவி கிடைக்காதவர்கள் தவெக செல்லும்  நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் கருதுகிறாராம். 

எல்லாவற்றிக்கும் மேலாக திமுகவை பல ஆண்டுகாலமாக, நிர்வகித்து வரும் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் 70 வயது கடந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது கைவைத்தால் அது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் என ஸ்டாலின் கருதுவதால்  உட்கட்சி தேர்தலை இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்றே  நினைகிறாராம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow