மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம்… எகிறியது விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் சரிவைச் சந்தித்தது.
ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை திடீரெனச் சரிந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழே சென்றது.
நவம்பர் மாதத்தின் மத்தியில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நிலவிய தங்கத்தின் விலைச் சரிவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள் நகைக்கடைகளிலும் குவிந்தனர். தங்கத்தின் விலை மேலும் குறைந்து ரூ.90 ஆயிரத்திற்கும் கீழே செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
நவம்பர் 23-ஆம் தேதி முதல் படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை, சவரனுக்கு சுமார் ரூ.2,000 வரை அதிகரித்தது.
இதற்கு நேர்மாறாக, நவம்பர் 25-ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 26-ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.960 அதிகரித்து, ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.11,540-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இரண்டாவது நாளாக விலை உயர்வு!
நவம்பர் 27-ஆம் தேதி தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து, ரூ.11,600-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.170-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடுமையாகக் குறைந்து வந்த நிலையில், விலைச் சரிவு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்துள்ளது, நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்கடன் வாங்கியவர்களுக்குப் புதிய நெருக்கடி!
இதனிடையே, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தபோது நகைக்கடன் வாங்கியவர்களுக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை திடீரெனச் சரிந்ததால், தங்கத்தின் தற்போதைய மதிப்புக்கு ஏற்ப நகைக்கடன்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மறுமதிப்பீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், தங்கத்தின் விலைச் சரிவுக்கு ஏற்ப கூடுதல் தொகையைச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், நகைக்கடன் வாங்கியவர்களுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?