இனி டெய்லர் தேவையில்லை..! சொடக்கு போடும் நேரத்தில் தைத்து முடிக்கும் அதிநவீன இயந்திரங்கள்..!
திருப்பூரில் துவங்கிய சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திரக் கண்காட்சியில் அதிநவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் ஹைடெக் வளாகத்தில் 2 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 17வது சர்வதேச பின்னலாடை இயந்திரக் கண்காட்சி முன்னதாக தொடங்கியது. வரும் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 170-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
325 அரங்குகள் கொண்ட இந்தக் கண்காட்சியில், சீனா, ஜப்பான், இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, ஜெர்மன், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்த அதிநவீன இயந்திரங்கள் காட்சிபடுத்தபட்டுள்ளன.
நிட்டிங் இயந்திரங்கள், ஒரு நாளைக்கு ஒரு டன் அளவில் உற்பத்தி செய்யக் கூடிய இயந்திரம், துணிகளுக்கு சாயமேற்றும் புதிய வகை டையிங் மெஷின்கள், தானியங்கி ஆய்வகம், பார்சல்களை எடுத்துச் செல்லும் ரோபோடிக் மெஷின், டியூப்லர் நிட்டிங் இயந்திரம், காம்பேக்டிங் மெஷின் உதிரி பாகங்கள், டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள், கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் என அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட இயந்திரங்கள் தனிக் கவனம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியை பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறை தொடர்பான கல்வி பயின்று வரும் மாணவர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
What's Your Reaction?