தங்கத்தின் விலை புதிய உச்சம் : சவரனுக்கு ரூ. 560 உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 25) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

தங்கத்தின் விலை புதிய உச்சம் : சவரனுக்கு ரூ. 560 உயர்வு 
Gold price hits new high

வாரத்தின் முதல் நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. டிச.22-இல் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1 லட்சத்து 560-க்கும், டிச.23-இல் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2,160-க்கும் விற்பனையானது.

தங்கம், வெள்ளியின் விலை மாறி, மாறி உயர்ந்து வருகிறது. இதில் தங்கம் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.12 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.12,820 ஆக அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.245 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000- அதிகரித்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.254-க்கும், கிலோவுக்கு ரூ.9,000-ம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருவதால் நகைப் பிரியர்கள், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow