இல்லத்தரசிகளுக்கு ஷாக்... ஏறுமுகம் கண்ட தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இது நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 22, 2026 - 12:34
இல்லத்தரசிகளுக்கு ஷாக்... ஏறுமுகம் கண்ட தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகம் கண்டு வரும் நிலையில், கடந்த 14 ஆம் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ 14,200க்கும் சவரன் ரூ 1,13,600க்கும் விற்பனையானது. இது படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அதன்படி நேற்று முன்தினம் (20.08.2026) ஒரு கிராம் ரூ 14,600 க்கும் சவரன் ரூ1,16,800 க்கும் விற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று (21.08.2026) ஒரு நாளிலே காலை மாலை என இரு முறை தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி  கிராமுக்கு ரூ 250 அதிகரித்து ஒரு கிராம் ரூ 14,850 க்கும் சவரனுக்கு ரூ 2000 உயர்ந்து அதன்படி சவரன் ரூ 1,18,800 விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 800 அதிகரித்து ரூ 1,19,600க்கும் கிராமுக்கு ரூ 100 அதிகரித்து ரூ 14,950க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்தை மட்டுமே கண்டு வரும் நிலையில் தற்போது இல்லதரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை பொறுத்த வரையில் எந்தவொரு மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 270க்கும், பார் வெள்ளி 2,70,000 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow