நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் : அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை
இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த விலை குறைவு முதலீட்டாளர்கள் நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து சவரன் 1,04,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று நேற்று சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்தது ஒரு கிராம் ரூ.281க்கும் கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,81,000க்கு விற்பனை செய்யப்பட்து.
இந்நிலையில், வாரத்தின் இரண்டாவது நாளாக தங்கம், வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தங்கம், வெள்ளி விலை இன்று 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258-க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ஒருகிலோ ரூ.2,58,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளியின் விலை போட்டிப்போட்டு உயர்ந்து கொண்டு வந்தது. இந்த நிலையில் தங்கம், வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்து இருப்பது நகை பிரியர்கள், முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
What's Your Reaction?

