"மாஸ் கம்பேக் ரெடி... 'ஜெயிலர் 2' Release Date அதிகாரப்பூர்வ அறிவிப்பு!"

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 பட்த்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Jul 2, 2026 - 21:45
"மாஸ் கம்பேக் ரெடி... 'ஜெயிலர் 2' Release Date அதிகாரப்பூர்வ அறிவிப்பு!"
jailer movie

2023 ல் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இரண்டாம் பாகத்தில், ரஜினிகாந்த் மீண்டும் முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே தோற்றத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஜெயிலர் முதல் பாகத்தின் இசை பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கும் இந்தப் படம், வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு காணொளியில் முக்கிய நடிகர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் 2 குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow