ரவிமோகன் வீட்டில் திருட்டு.. சிக்கிய கார் டிரைவர்..!
நடிகர் ரவி மோகன் வீட்டில் 3 லட்சம் பணம் மற்றும் டைமண்ட் நகைகள் திருடுப்போன விவகாரத்தில் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நீலாங்கரை சேஷாத்ரி நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர் ரவி மோகன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரவிமோகன் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் ஒருவரை பிடித்து வைத்து இருந்த நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் அந்த பணிப்பெண்ணை விடுவித்தனர். மேலும் திருட்டு தொடர்பாக முறைப்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என ரவி மோகனை அறிவுறுத்தி விட்டு சென்றனர்.
இதையடுத்து ரவி மோகனின் மேனேஜர் கோகுல், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நடிகர் ரவி மோகனின் வீட்டின் லாக்கரில் இருந்த மூன்று லட்சம் பணம் மற்றும் டைமண்ட் செயின் திருடு போயிருப்பதாக கூறி புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் ரவி மோகன் வீட்டில் பணியாற்றி வந்த இரண்டு ஓட்டுனர்கள், ஒரு பிஏ, பணிப்பெண் மற்றும் அவரது மகன் என ஐந்து நபர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் நடிகர் ரவி மோகனின் வீட்டில் திருடியவர் அவரது கார் ஓட்டுநர் ரமேஷ் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?