"TVK MLA ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை!" - கனிமொழி அதிரடி!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் மற்றும் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களை முன்வைத்து தவெக அரசையும் முதலமைச்சர் விஜயையும் திமுக எம்.பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.. அவரது அதிரடி கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டிற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தவெக அரசையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை.. கனிமொழி கண்டனம்!
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரத்தில் மதுபோதையில் அவரது வீட்டிற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியருக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு தவெக அரசின் நிர்வாகத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு.. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பது மட்டுமே போதுமான நடவடிக்கையா என்றும், இதன் மூலம் அவருக்கு முழுமையான பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்றும் தலைமைச் செயலரின் நடவடிக்கையை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்க்கு கனிமொழி எழுப்பிய கேள்வி!
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் என்ன பதில் அளிக்கப் போகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ள கனிமொழி, மக்கள் தொடர்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை எப்போதும் சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
ஒரே நாளில் 11 கொலைகள்? மற்றொரு பதிவிலும் கடும் விமர்சனம்!
இதற்கு முன்னதாக வெளியிட்ட மற்றொரு பதிவில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 கொலைகள் நடைபெற்றதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
தேனி, திருவள்ளூர், சமயபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பல குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக விமர்சித்த கனிமொழி, திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றியின் அகந்தையில் ஆட்சி நடத்துவதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
மக்கள் அனைத்தையும் தொடர்ந்து பொறுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிட வேண்டாம் என முதலமைச்சர் விஜய்க்கு கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
https://x.com/KanimozhiDMK/status/2119765618165797007?a=fiPTHBEb2hIL7T_qqdI&s=20
What's Your Reaction?