தவெக தாவ தயாராகும் 2 அதிமுக மாஜிக்கள்: விஜய் முன்னிலையில் விரைவில் ஐக்கியம்
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் விரைவில் ஐக்கியமாக தயார் ஆகி வருவதாக பனையூர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அண்மையில் திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மூலம் வைத்திலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து வைத்திலிங்கமும் தவெகவில் ஐக்கியமாக உள்ளதாக கூறப்பட்டது.
இதே போன்று கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மாபா பாண்டியராஜன் தவெக செய்திதொடர்பாளர் ராஜ்மோகனை சந்தித்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும், மாபா பாண்டியராஜனுக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
பொதுமேடைகளில் கூட மாபா பாண்டியராஜனை ராஜேந்திரபாலாஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது தொடர்பாக அதிமுக தலைமையிடம் மாபா பாண்டியராஜன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அதிமுக தலைமை மீது அவர் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட மாபா பாண்டியராஜன் கலந்து கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகனுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் மாபா பாண்டியராஜனும் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் வைத்திலிங்கம், மாபா பாண்டியராஜன் ஆகியோர் விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம் ஆவார்கள் என தெரிகிறது.
What's Your Reaction?

