”முதல் சம்பளம் போல ஆம்பூர் மக்களை எப்போதும் நான் மறக்க மாட்டேன்” – கதிர் ஆனந்த் பரப்புரை

வருகிற மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆம்பூர் நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 

”முதல் சம்பளம் போல ஆம்பூர் மக்களை எப்போதும் நான் மறக்க மாட்டேன்” – கதிர் ஆனந்த் பரப்புரை

அப்பொழுது பேசிய அவர், வாழ்வில் யாரும் முதன்முதலில் வேலைக்கு சென்றதையும், முதல் சம்பளம் வாங்கியதையும் மறக்கமாட்டார்கள். அதேபோல், நாள் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதற்கு காரணம் ஆம்பூர் மக்கள் செலுத்திய வாக்குதான், அதை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என தெரிவித்தார். அத்துடன், பாஜக அரசை வீழ்த்த வேண்டும் இல்லையென்றால், கேஸ் சிலிண்டர் விலை இன்னும் ஏறிவிடும் என மக்களிடம் உரையாற்றினார். 

இதைதொடர்ந்து, பி-கஸ்பா பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கதிர் ஆனந்த், அங்கு வந்த குழந்தைக்கு திமுகவின் துண்டை அணிவித்தார். அத்துடன் இஸ்லாமியர்கள் பரிசாக வழங்கிய குரானையும் பெற்றுக்கொண்டார். இந்த பிரசாரத்தில்  ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் திமுக, இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow