LIC-ன் 70வது ஆண்டு விழா கோலாகலம்... பயனாளிகளுக்கு நல உதவிகள்!

LIC நிறுவனம் 70-வது ஆண்டுவிழாவில், சிறப்பு விருந்தினரை அழைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை கோலாகலமாக கொண்டாடியது.

Sep 7, 2026 - 19:22
LIC-ன் 70வது ஆண்டு விழா கோலாகலம்... பயனாளிகளுக்கு நல உதவிகள்!
LIC Celebrates 70 Years of Trust and Service

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) 70-வது ஆண்டு விழா செப்டம்பர் 1, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் LIC தென் மண்டல மேலாளர் திரு. K. முரளிதர் அவர்கள் கலந்து கொண்டு, நிறுவனக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி, LIC நிறுவனத்தின் சேவைகள் மற்றும் சாதனைகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள LIC நிறுவனத்தின் பயணம், சமூகப் பொறுப்பு மற்றும் மக்களுக்கு வழங்கி வரும் சேவைகள் குறித்து விழாவில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பிரபல பின்னணிப் பாடகி டாக்டர். நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையில், LIC நிறுவனத்தின் நீண்டகால சேவை, மக்களுடனான அதன் நெருக்கமான உறவு மற்றும் சமூக நலப் பணிகளில் அதன் பங்களிப்பு குறித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, சிறப்பு விருந்தினர் டாக்டர். நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் தென் மண்டல மேலாளர் திரு. K. முரளிதர் ஆகியோர் இணைந்து பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினர். இந்த நலத்திட்ட நிகழ்வு, LIC நிறுவனத்தின் சமூக அக்கறையையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேவையுள்ளோருக்கு வழங்கும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

LIC 70-வது ஆண்டு விழா, நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது. மக்கள் நலனையும் சமூக சேவையையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் LIC-யின் பயணத்தில் இந்த விழா ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow